சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குமாரபாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

குமாரபாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
குமாரபாளையம் காவல் நிலையம் தொடங்கி எடப்பாடி சாலையில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைக்காரர்கள் தங்களின் கடைகளுக்கு முன்பாக விளம்பரப் பலகைகள், மேற்கூரைகள் அமைத்திருந்தனர். இதனால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் நிலவி வந்தது.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர். ரகுநாதன் முன்னிலையில் எடப்பாடி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.
எடப்பாடி சாலையில் சின்னப்பநாயக்கன்பாளையம் வரையில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அசம்பாவிதம் நேராமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com