லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம்:

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் கே. நல்லதம்பி பங்கேற்க அனுமதி இல்லை என அமைதி பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் கே. நல்லதம்பி பங்கேற்க அனுமதி இல்லை என அமைதி பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் கடந்த 27-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்தக் கூட்டம் தொடர்பாக சங்கத் தலைவர் ஆர். வாங்கிலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசிடம் மனு அளித்திருந்தார்.
அதில் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே. நல்லதம்பியை சங்கத்திலிருந்து தாற்காலிகமாக நீக்கி விட்டதாகவும், அவர் கூட்டத்தில் பங்கேற்க கூடாது, அவ்வாறு பங்கேற்றால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்படி நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மகாசபை கூட்டத்தை ஒத்திவைக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை 2-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், டிஎஸ்பி ராஜேந்திரன், மாவட்ட பதிவாளர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வாங்கிலி தரப்பினரும், முன்னாள் தலைவர் நல்லதம்பி தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது முன்னாள் தலைவர் நல்லதம்பி சங்கத்தில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட பதிவாளர் கூறினார்.
இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் முன்னாள் தலைவர் நல்லதம்பி கலந்து கொள்ள அனுமதி இல்லை எனவும், இதை மீறி பங்கேற்று சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதில் ஆட்சேபனை இருந்தால் முன்னாள் தலைவர் நல்லதம்பி நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் தலைவர் கே.நல்லதம்பி கூறியது:
அமைதி பேச்சுவார்த்தையின் போது எந்த அடிப்படையில் என்னை சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்கள் என கேட்டோம். அதற்கு அதிகாரிகள் சரியான பதிலை அளிக்கவில்லை. இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com