பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: கும்பல் தப்பி ஓட்டம்

ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மர்ம கும்பல் நகை பறிக்க முயன்றது.

ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மர்ம கும்பல் நகை பறிக்க முயன்றது.
புதுசத்திரம் அருகே காரைக்குறிச்சிப் புதூர் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனகொடி (34). இவர், பாய்ச்சல் கிராமத்தில் உள்ள தனது அண்ணன் முருகேசனை பார்ப்பதற்காக டிவிஎஸ் மொபட் வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் பாவை கல்லூரி எதிரே மேம்பாலத்தில் இவர் சென்றபோது, சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி குவாலிஸ் காரில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், இவரைத் தடுத்து நிறுத்தி நகையைப் பறிக்க
முயன்றனர்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த தனகொடி கழுத்தில் இருந்த தனது 4 சவரன் நகைகளை கழற்றி பாலத்தின் கீழ் பேருந்துக்கு நின்றிருந்த கல்லூரி மாணவர்களிடம் தூக்கி வீசி,
கூச்சலிட்டார்.
இதைப் பார்த்த தனியார் கல்லூரி மாணவர்கள் கும்பலை பிடிக்க ஓடினர். மேலும் அவ்வழியே சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் நகை பறிப்பு கும்பலின் காரை மறித்தவாறு பேருந்தை நிறுத்தினார். இதனால் பயந்த நகை பறிப்பு கும்பல் காரை எடுக்க வழியில்லாமல், உயிர் பிழைத்தால் போதும் என்று, காரை விட்டு விட்டு தப்பியோடினர்.
கர்நாடாக பதிவு கார்...
இதையடுத்து அங்கு வந்த கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் காரை பறிமுதல் செய்தனர். இந்த கார் கர்நாடாக பதிவு பெற்ற கார் எனத் தெரியவந்தது. காரில் இருந்த செல்லிடப்பேசி எண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து தப்பியோடிய கொள்ளையர்களை புதுசத்திரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com