குமாரபாளையத்தில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலைவாய்ப்பை அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அடிப்படைத் தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க சமூகப் பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனையை நிறுத்த வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தைத் திருத்தி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து விசைத்தறி, நெசவுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி, சிஐடியூ, ஏஐசிசிடியூ, எல்பிஎப், ஹெச்எம்எஸ், ஐஎன்டியூசி தொழில்சங்கங்கள் இணைந்து இப்பிரசார இயக்கத்தை நடத்தின.
குமாரபாளையம் காவேரி நகரில் தொடங்கி பேருந்து நிலையம் ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற இப்பிரசார இயக்கத்தில் நிர்வாகிகள் கே.எஸ்.பாலசுப்பிரமணி, எஸ்.ஜானகிராமன், எஸ்.ஆறுமுகம், எம்.சரஸ்வதி, கே.பாலுசாமி, எஸ்.பி.நஞ்சப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com