நாமக்கல் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்: ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் நகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார். நாமக்கல் நகராட்சி 14-ஆவது வார்டு தில்லைபுரம், பரமத்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அப் பகுதியில் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சுகாதாரத்தை பராமரிக்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும்  உத்தரவிட்டார்.
இதேபோல் நாமக்கல் காவல் நிலையம் சுகாதாரமாக பேணிகாக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய மோட்டார் சைக்கிள்களை அப்புறப்படுத்தியும், பழைய பொருள்களை சுத்தப்படுத்தி கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் பரமத்தி சாலையில் காவலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அங்கு மாடி வீடுகளில் மழைநீர் தேங்கியிருப்பதை அப்புறப்படுத்தியும், அங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தி கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து கொள்ளவும் அறிவுரை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com