எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: அதிமுகவினர், பொதுமக்களுக்கு அழைப்பு

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அமைச்சர்கள் பி.தங்கமணி, வி. சரோஜா,

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அமைச்சர்கள் பி.தங்கமணி, வி. சரோஜா, மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சார்பில் நாமக்கல் அருகே கருப்பட்டிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று, ரூ. 382.94 கோடி மதிப்பில் 32 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.332.25 கோடி மதிப்பில், 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், 29,039 பயனாளிகளுக்கு, ரூ.188.01 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார்.
நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியில் நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கும் ரூ.185 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ. 125 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு-நாமக்கல் 4 வழிச்சாலை, ரூ.64 கோடி மதிப்பில் கணவாய்ப்பட்டி முதல் மோகனூர் வரை விரிவாக்கம் செய்து முடிக்கப்பட்ட சாலைப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.
விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் ப.தனபால், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவை சிறப்பிக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com