பரமத்தி வேலூரில் விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து வாய்க்கால் பாசன விவசாய சங்கங்களின் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக்

அனைத்து வாய்க்கால் பாசன விவசாய சங்கங்களின் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜா, கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பரமத்தியில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு பரமத்தி வேலூர் ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி வரவேற்றார். நன்செய் இடையாறு  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செந்தில்குமார், ராஜா வாய்க்கால் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாவு, பொத்தனூர் விவசாயிகள் சங்கத் தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
17 ஊர் விவசாயிகள் சங்கத் தலைவர் மாயாண்டிக்கண்டர், கபிலர்மலை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் டாக்டர் நெடுஞ்செழியன், மாவட்ட உழவர் உழைப்பாளர் கட்சிச் செயலாளர் குப்புதுரை ஆகியோர்பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய ,மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொமராபாளையம் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலாளர் மன்மதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com