வீட்டில் சுவாமி சிலைகள்: போலீஸார் விசாரணை

ராசிபுரத்தில் வசித்து வரும் வழக்குரைஞர் எனக் கூறியவரின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் இருப்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரத்தில் வசித்து வரும் வழக்குரைஞர் எனக் கூறியவரின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் இருப்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம் வி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் சர்ச்சில் (60). இவர், தன்னை சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் எனக் கூறி வந்துள்ளார். இந்த நிலையில், ஆண்டகளூர்கேட் பகுதியைச் சேர்ந்த  ரமேஷ் என்பவர் ஒரு வழக்குக்காக வின்சென்ட்டிடம் வழக்குக்கான ஆவணங்கள், நீதிமன்ற கட்டணம் என ரூ. 35 லட்சத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், வின்சென்ட் வழக்கு நடத்தாமல் காலதாமதம் செய்ததால்  சந்தேகமடைந்த ரமேஷ் விசாரணை நடத்தியதில் வின்சென்ட் வழக்குரைஞர் இல்லை என்பது தெரியவந்ததாம். இதையடுத்து ரமேஷ் ராசிபுரம் போலீஸில் புகார் அளித்தார். இதனால் வின்சென்ட் சர்ச்சில் தலைமறைவானாராம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வின்சென்ட் சர்ச்சில் வீட்டில் இருப்பதாக அறிந்து  ரமேஷ் தனது நண்பர்களுடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை.  மேலும் வின்சென்ட் சர்ச்சிலின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வின்சென்ட் சர்ச்சில் வழக்குரைஞர்தானா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com