வேலூர் பேரூராட்சியில் குடிநீர் பிரச்னை: ஆட்சியரிடம் மனு

பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக வேலூர் பேரூராட்சியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக வேலூர் பேரூராட்சியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் கவுன்சிலர்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், வேலூர் பேரூராட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
வேலூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்தப் பேரூராட்சிக்கு காவிரி ஆற்றில் உள்ள 3 நீரூற்று கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீரூற்று கிணறுகளில் 30 ஹெச்பி திறன் கொண்ட மின் மோட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் இப்போது 5 ஹெச்பி அளவுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது.
இதனால், வேலூர் பேரூராட்சிப் பகுதிக்கு 5 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. கிணறுகளில் தண்ணீர் இருந்தும், மோட்டாரை சீரமைக்காததால் போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பல மாதங்களாக சுத்தம் செய்யாததால், பல நேரங்களில் தண்ணீர் சேறு கலந்து வருகிறது.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலரிடம் பல முறை நேரில் சென்று முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. இதனால் ஆட்சியர் தலையிட்டு வேலூர் பேரூராட்சி பகுதியின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com