விதிமுறை பின்பற்றாத 61 நிறுவனங்கள் மீது வழக்கு: தொழிலாளர் துறை நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று விதிமுறைகளைப் பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 61 நிறுவனங்கள் மீது நாமக்கல் மாவட்ட தொழிலாளர்

சுதந்திர தினத்தன்று விதிமுறைகளைப் பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 61 நிறுவனங்கள் மீது நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய விடுமுறை தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது அவர்களது சம்மதத்துடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியத்துடன் பணியாற்ற ய அனுமதிக்க வேண்டும்.  அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். 
இந்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்-பொறுப்பு) டி.பாலதண்டாயுதம் தலைமையிலான தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் நாமக்கல் மாவடத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்படி 25 கடைகள்,  43 உணவு நிறுவனங்கள் மற்றும் 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 78 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்ட்டது. இதில், 38 உணவகங்கள், 19 வணிகக் கடைகள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என,  61 நிறுவனங்களில் சட்ட விதிமுறை பின்பற்றப்படாதது தெரியவந்தது.  இவற்றின் மீது தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய விடுமுறை நாட்களில் தொழில் நிறுவனங்கள் சட்ட விதிகளைப் பின்பற்றத் தவறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் எச்சரிக்கை விடுத்தார்.  
தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுதா, என்.மாயவன், சு.சாந்தி உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com