வில்லிபாளையம், ஜங்கமநாயக்கன்பட்டி பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்லிபாளையம் மற்றும் ஜங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்லிபாளையம் மற்றும் ஜங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தினை புறக்கணித்து போராட்டம் ஈடுபட்டனர்.
 வில்லிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குச்சிபாளையத்தில் புதன்கிழமை கிராமசபை கூட்டம் நடைபெற்றது.  இக் கூட்டம் வில்லிபாளையத்தின் மையப்பகுதியான ஊராட்சி மன்ற அலுவலகம் பகுதியில் நடத்த வேண்டும் என வில்லிபாளையம் மற்றும் ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  ஆனால் குச்சிபாளையத்தில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதால், ஜங்கமநாயக்கன்பட்டி மற்றும் வில்லிபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.  இது குறித்து அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:   வில்லிபாளையம் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமுதாயக்கூடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமுதாயக்கூட கட்டடத்தை குச்சிபாளையத்தில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அந்த இடத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசிப்பதாகவும், அங்கு சமுதாயக்கூடம் கட்டப்பட்டால் ஒரு சமூதாயத்தை சேர்ந்த மக்கள் அதனை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உருவாக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே சமுதாயக்கூடத்தை பொதுவான இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்திருந்தோம்.  சமுதாயக்கூடம் கட்டுவதற்கான தீர்மானம் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படுவதாக வந்த தகவலையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஊரின் மையப்பகுதியில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்துகொள்ளும் வகையில் கிராமசபைக் கூட்டம்  நடத்தாததைக் கண்டித்தும் வில்லிபாளையம் மற்றும் ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கிரானைட் குவாரியை மூடக் கோரி புறக்கணித்த பொதுமக்கள்...
பரமத்தி வேலூர் வட்டத்துக்கு உட்பட்ட பெரியசூரம்பாளையம் பகுதிகளில் உள்ள கிரானைட் கல் குவாரியை மூட வேண்டும் எனக் கூறி கிராமசபைக் கூட்டத்தை அப் பகுதி பொதுமக்கள் புறக்கணித்தனர்.
பரமத்தி வேலூர் வட்டம்,  பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியசூரம்பாளையம் பகுதிகளில் நான்கு கிரானைட் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கிரானைட் கல் குவாரியில் பாறைகளுக்கு வைக்கும் அதிக சக்திவாய்ந்த வெடிகளால் சுற்று வட்டார பகுதிகள் அதிர்வுகள் ஏற்பட்டு, வீடுகளில் விரிசல், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் மண்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  மேலும், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, அப் பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர்  பற்றாக்குறை ஏற்பட்டு,  விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  இந்த நிலையில், புதன்கிழமை சுதந்திர தினத்தன்று சூரம்பாளையத்தில் நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டத்திற்கு பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கிரானைட் கல்குவாரி பிரச்னைக்கு சரியான முடிவு எடுக்கும் வரை கிராமசபை கூட்டம் நடத்த அனுமதிக்க மாட்டோம்.  பொதுமக்களாகிய நாங்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டோம் எனக் கூறி கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனால் அங்கு வந்த அதிகாரிகளை திருப்பிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com