குமாரபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

குமாரபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இப் பேரணிக்கு மாவட்டத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.  திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.  குமாரபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.சேகர் பேரணியைத் தொடக்கி வைத்தார்.  பள்ளிபாளையம் பிரிவு சாலையில் தொடங்கிய பேரணி,  நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. 
பேரணியில், பெண்கள், சிறுமியர் மீதான வன்முறை ஒழிப்பு,  நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு,  சுற்றுப்புறத் தூய்மை, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிதல், சாலை விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர்.  தொடர்ந்து, பொது மருத்துவ முகாமில் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com