நெல் ஜெயராமனுக்கு அஞ்சலி

174 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து நெல் திருவிழாவை  நடத்தி வந்தவரும், இயற்கை விவசாய

174 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து நெல் திருவிழாவை  நடத்தி வந்தவரும், இயற்கை விவசாய ஆர்வலருமாகிய நெல் ஜெயராமன்  உடல்நலமில்லாமல் காலமானார். 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நம்ம திருச்செங்கோடு மற்றும் விதைகள் அமைப்பின் சார்பாக ஞாயிற்றுக் கிழமை  அண்ணாசிலை அருகில் அவரது மறைவுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் நெல் ஜெயராமன் உருவப்படத்துக்கு மலர்தூவியும்,  பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, பூங்கார், இலுப்பைப்பூ சம்பா,  கருப்பு கவுனி, சிகப்பு கவனி,  வாலான் சம்பா,  பிசினி, கருவாச்சி, மடுமுழுங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய விதைகளை நெல் ஜெயராமன் உருவப்படத்துக்கு கீழ் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com