பொத்தனூர் பேரூராட்சியில் ரூ.2.5 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான தார்ச் சாலை மற்றும் வடிகாலுடன் கூடிய தார்ச்சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
பொத்தனூர் பேருராட்சி பகுதியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஜேடர்பாளையத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் பிரியும் தண்ணீர்பந்தல்மேடு முதல் பொத்தனூர் காவிரி வரையிலும்,  பொத்தனூர் தில்லைநகரில் வடிகாலுடன் கூடிய தார்ச் சாலை அமைக்க ரூ.1 கோடி மதிப்பீட்டிலான பணிகளையும், பொத்தனூர் பேருராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.20.60 லட்சம் மதிப்பீட்டிலான வாகனத்தையும் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். 
இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், பொத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாராயணன்,செயல் அலுவலர் கீதா  உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com