தியாகிகளின் மனைவிகளுக்கு 100 சதவீத ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளின் மனைவிகளுக்கு மத்திய அரசைப்போல் மாநில அரசும் 100 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என

சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளின் மனைவிகளுக்கு மத்திய அரசைப்போல் மாநில அரசும் 100 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் க. சிதம்பரம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தியாகிகள், அவர்களது மனைவியர், உடல் ஊனமுற்ற, திருமணமாகாத அவர்களது வாரிசுகள் என சுமார் 500 பேர் உள்ளனர்.
தியாகிகளின் நேரடி வாரிசுகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வயது தளர்வால் வாய்ப்பு பெற வழியில்லை. இதனால், அவர்களது பேரன், பேத்திகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில், டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளில் 10 சதவீத ஒதுக்கீடு மரபு வழியாக வழங்கிட வேண்டும்.
தியாகிகள், அவர்களது மனைவி உயிரிழந்த பின், அரசுடன் தொடர்பு நீடிக்க பேரன், பேத்தி என அவர்களது வாரிசுகளுக்கு கௌரவ ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் மாதந்தோறும் அரசு வழங்க வேண்டும்.  சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது வாரிசுகளுக்கு சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை,  உள்ளாட்சிகளில் மரபு வழி நியமன முறையில் 10 சதவீதம் இடம் ஒதுக்கிட வேண்டும். தமிழக அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாநில ஓய்வூதியத்தை உயர்த்திட வேண்டும். மத்திய அரசைப்போல் தமிழக அரசு, தியாகிகளின் மனைவிகளுக்கு 100 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com