கோடைகால தீவன பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

கோழிப் பண்ணைகளில் கோடைகால தீவன பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோழிப் பண்ணைகளில் கோடைகால தீவன பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பனிக்காலம் முடிவுறும் தருவாயில் இருப்பதால் இரவு வெப்பம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கோடை காலம் துவங்குவதன் அறிகுறியாக பகல் வெப்பம் அதிகரித்துள்ளது. 
இத்தகைய இருவேறு விதமான வெப்ப அளவுகள் கோழிகளில் அயற்சியை தூண்டக் கூடியவை. இதனால் கோடை காலத்துக்கான தீவன பராமரிப்பு முறைகள், குடிநீரைக் குளிர்விக்கும் முறைகள் மற்றும் குடிநீர் நிப்பிள்களை சுத்தம் செய்வதுடன் பண்ணையின் குறுக்குவாட்டில் காற்றின் வேகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டடை நீக்குவது மற்றும் மின்விசிறிகள் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் கோழிகள் பெரும்பாலும் வெப்பஅயற்சி மற்றும் மேல்மூச்சுக் குழல் அயற்சி நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
பகல் நேரங்களில் வெப்பநிலை உயர்ந்து வருவதால் கோழிகளை வெப்ப அயற்சியில் இருந்து காக்கும் பொருட்டு பண்ணையாளர்கள் தண்ணீர் தெளிப்பான்களை பண்ணைகளில் பயன்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com