"திறமைகளை வளர்த்துக் கொண்டால்தான் வாழ்க்கை முறை மாறும்'

திறமைகளை வளர்த்துக் கொண்டால்தான் வாழ்க்கை முறை மாறும் என மன நல மருத்துவ நிபுணர் கண்ணன் கிரிஷ் தெரிவித்தார்.

திறமைகளை வளர்த்துக் கொண்டால்தான் வாழ்க்கை முறை மாறும் என மன நல மருத்துவ நிபுணர் கண்ணன் கிரிஷ் தெரிவித்தார்.
குமாரபாளையம் எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரியின் 10-ஆவது ஆண்டுவிழா எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே. நடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் என். மதன்கார்த்திக் வரவேற்றார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சி. சிவக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற கல்பாக்கம் இந்திராகாந்தி அணுமின் நிலைய முன்னாள் இயக்குநர் கல்யாணசுந்தர பெருமாள் பேசியது:
வாழ்க்கையில் வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.  புதுமையானவற்றை உருவாக்குவதோடு,  உலக நடைமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். 
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மனநல மருத்துவ நிபுணர் கண்ணன் கிரிஷ் பேசியது:
பொதுவாகவே குழந்தைகள் 10-ஆம் வகுப்பை முடித்துவிட்டால் அவர்களிடம் குடும்ப சூழ்நிலை, பிரச்னைகள் என சுமைகளை ஏற்றி விடுகிறோம். மாணவர்கள் தேர்வுக்காக மூன்றே நாள்களில் படித்து விட முடியும் என நினைக்கிறார்கள்.
3 மாதங்கள் படிக்க முடியாத பாடங்களை வெறும் 3 நாள்களில் படித்துவிட முடியும் என நம்புகிறோம். வெறும் 6 மணி நேரத்தில் ஒரு பாடத்தை படித்துவிட முடியுமா? இந்த நிலை மாறவேண்டும்.
திறமைகளை வளர்த்துக்கொண்டால்தான் வாழ்க்கை முறை மாறும். நிறைய கற்றுக் கொள்வதற்கு சக்தி தேவைப்படுகிறது. வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி பெறுவதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு 5 காரணிகள் இருக்கின்றன. சரியான இடம், சரியான நேரம் அமைந்தால் சரியான அறிவு கிடைக்கும்.  இவை மூன்றும்  கிடைக்கப்பெற்று சரியான செயல் திட்டம், சரியான நடத்தை இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்றார்.
கல்வியாண்டில் சாதனை புரிந்த பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற வடகிழக்கு மாநில பாரம்பரிய நடனம், பாடல்கள் உள்ளிட்ட நடன, நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஏ. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com