அடுத்தடுத்து மூன்று கார்கள் மீது மோதிய மினி லாரி

பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தில் அடுத்தடுத்த கார்களின் மீது மினி லாரி மோதிய விபத்தில் மூன்று கார்கள் சேதமடைந்தன. 

பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட பாலத்தில் அடுத்தடுத்த கார்களின் மீது மினி லாரி மோதிய விபத்தில் மூன்று கார்கள் சேதமடைந்தன. 
பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் மேல் உயர்மட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் உள்ளது.  இப்பாலத்தை கடப்பதற்காக நின்று கொண்டிருந்த காரின் மீது மினி லாரி மோதி,  உடன் சென்ற மற்ற இரண்டு கார்கள் மீதும் மோதியுள்ளது.  இதில் மூன்று கார்களும் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  இதில் காரில் வந்த ஈரோடு மாவட்டம்,மூலனூரைச் சேர்ந்த அருண்குமார் (23),  இராசிபுரம் அருகே உள்ள பொட்டணத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (30), சேலத்தைச் சேர்ந்த அருண் (32), ஆகியோரும்,மதுரையைச் சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன் (25) ஆகியோர் லேசான காயங்களுடனும்,  அவர்களுடன் வந்தவர்களும் காயமின்றி உயிர்தப்பினர்.  
 மேலும் விபத்து காரணமாக கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com