தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் தொழில் தொடங்க மானிய கடனுதவி:  ஜன.18இல் நேர்காணல்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் தொழில் துவங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற சிறப்பு நேர்காணல் வரும் 18 ஆம் தேதி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் தொழில் துவங்க மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற சிறப்பு நேர்காணல் வரும் 18 ஆம் தேதி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கையினை வெளியிட்டு மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.  
 தொழில் வணிகத் துறை வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் படித்த வேலையற்ற இளையஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்,   பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்,   புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ஆகிய கடன் திட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. 
   தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த நபர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு தேர்ச்சி வரை தகுதி பெற்ற நபர்கள்,  விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏற்புடைய கடன் உதவி திட்டத்தைச் தேர்வு செய்து கொள்ளலாம். 
    இந்த கடனுதவி பெற சிறப்பு நேர்முகத் தேர்வு வரும் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட தொழில் மைய கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.  மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் படிப்பு சான்றிதழ்கள்,  விலைப்பட்டியல் நகல்கள், குடும்ப அட்டை நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் தவறாமல் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com