பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு பல்வேறு பகுதியில் அன்னதானம் வழங்க ஏற்பாடு

ராசிபுரம் ஓம்ஸ்ரீ ஆறுபடை முருகன் திருப்பணி குழுவினர் சார்பில் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 6-ம் ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா ஜன.14-ல் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

ராசிபுரம் ஓம்ஸ்ரீ ஆறுபடை முருகன் திருப்பணி குழுவினர் சார்பில் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 6-ம் ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா ஜன.14-ல் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
ராசிபுரம் ஒம்ஸ்ரீ ஆறுபடை முருகன் திருப்பணி குழுவினர் சார்பில் ராசிபுரம் வழியாக பழனி தைபூச விழாவில் பங்கேற்க பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு 6-ம் ஆண்டாக இதற்கான விழா ஜன.14-ல் நடைபெறுகிறது.  ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும்.  இதனையடுத்து ஜன. 15-ல் அரச்சலூர் பி.கொமாரபாளையம் மாகாளியம்மன் கோவில் வளாகத்திலும் அன்னதானம் பக்தர்களுக்கு நடைபெறும்.  இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் கே.ராமசாமி, வி.கௌரிசங்கர், பி.சதீஸ்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.  
ஓம் பாதயாத்திரை குழு:   இதே போல்,  ராசிபுரம் ஓம் பழனி பாதயாத்திரை குழு சார்பில் பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தை. 1 முதல் தை.5 வரை பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.  முன்னதாக ஜன.14-ல் ராசிபுரம் சித்தி விநாயகர் கோயிலில் இருந்து அதிகாலை ஊர்வலமாக புறப்பட்டு, ராசிபுரம் முனியப்பன் கோயயில் முன்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.   இதனையொட்டி வியாழக்கிழமை, சித்தி விநாயகர் கோயில் உள்ள ஸ்ரீபாலமுருகனுக்கும், உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து,  பின்னர் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தி நகர்வலமாக அழைத்து வரப்பட்டார்.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.          

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com