நாமக்கல் செல்வம் கல்லூரியில் பொங்கல் விழா

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
தாளாளர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ந.ராஜவேல் வரவேற்றார். ஜெயம் செல்வராஜ், துணை தாளாளர் செ.பாபு, செயலர் கவீத்ராநந்தினி பாபு முன்னிலை வகித்தனர். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கி.சி.அருள்சாமி, துணை முதல்வர்கள் வாழ்த்தி பேசினர். விழாவில், மாணவ மாணவியர் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக காங்கேயம், புளியங்குளம், அந்தியூர், பருகூர், கும்பகோணம், குட்டை போன்ற பாரம்பரிய காளைகள் மாணவ, மாணவியர் முன் காட்சிப்படுத்தப்பட்டன. இது தமிழ் பாரம்பரிய காளைகள் குறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நவீன வளர்ச்சியால் கலாசாரம் பாதுகாக்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா? என்ற தலைப்பில் பேராசிரியர்கள் பங்கு பெற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
மேலும் மாணவ, மாணவியர் கிராமிய நடனம், கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் முதலான தமிழ் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். மாணவர்களுக்கு கலைப் போட்டிகளும், மாணவியருக்கு கோலப் போட்டிளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் கே.கே.கவிதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com