நாமக்கல்லில் பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகரில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களின் விற்பனை அமோகமாக இருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகரில் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்களின் விற்பனை அமோகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி, வீட்டு முற்றத்தில் கரும்பு, மஞ்சள் குலை வைத்து பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபடுகின்றனர். இந்த பூஜையில் ஆவாரம் பூ, பூலாம் பூ மற்றும் வேப்பிலை அடங்கிய காப்புக் கட்டு பூ வீட் டின் தாழ்வாரத்தில் கட்டப்படுகிறது. கரும்பு, மஞ்சள், காப்புக் கட்டு பூ ஆகியவற்றை நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
நாமக்கல் நகரில் உழவர் சந்தை மற்றும் கடை வீதியில் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை களை கட்டியது. அதிகாலை முதல் ஏராளமானோர் வந்து பொங்கல் பொருள்களை வாங்கிச் சென்றனர். இதில் ஒரு ஜோடி கரும்பு ரூ.50 முதல் ரூ.70 வரையிலும், மஞ்சள் கொத்து ஒரு ஜோடி ரூ.40 வரையிலும், காப்புக் கட்டு பூ ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், கோலப் பொடி ஒரு பாக்கெட் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டன. நாமக்கல் பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் குவிந்ததால் திருச்சி, சேலம், மதுரை, துறையூர், கரூர், ஈரோடு, கோவை செல்லும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com