பரமத்தி வேலூர் அருகே மனுநீதி முகாம்

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் அருகே உள்ள கோலாரத்தில் அண்மையில் நடைபெற்ற மனுநீதி திட்ட நாள் முகாமில் 60 பயனாளிகளுக்கு ரூ.26.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மாவட்ட

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் அருகே உள்ள கோலாரத்தில் அண்மையில் நடைபெற்ற மனுநீதி திட்ட நாள் முகாமில் 60 பயனாளிகளுக்கு ரூ.26.70 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.
முகாமுக்கு ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் வரவேற்றார். சேலம், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சின்னுசாமி வாழ்த்தி பேசினார்.
இதில், நல்லூர் உள் வட்டத்துக்குள்பட்ட கோலாரம், செருக்கலை மற்றும் ராமதேவம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வருவாய்த் துறையின் சார்பில் 144 பயனாளிகளுக்கு ரூ.15,30,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வாரிசு சான்று, பட்டா மாறுதல், நத்தம் தோராய பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வேளாண் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ. 76,300 மானிய நிதி உதவியுடன் ரூ.2,05,958-ம், மின்கல தெளிப்பான், ரொட்டாவேட்டர், சோலார் பவர் லைட் டிராப் உள்ளிட்ட வேளாண் கருவிகளையும் வழங்கினார்.
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,60,240 மதிப்பிலான சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்கான மானியம், விதைகள் மற்றும் பழக்கன்றுகளையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பேர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் ரூ.54 ஆயிரம் மதிப்பிலான மாதாந்திர பராமரிப்பு பெருவதற்கான உத்தரவும் வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 லட்சம் வீதம்,ரூ.7.20 லட்சத்தில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் உட்பட 160 பயனாளிகளுக்கு ரூ.26.70 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்மணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com