"நீரா பானம் தயாரித்து விவசாயிகள் லாபம் ஈட்டலாம்'

நீரா பானம் தயாரித்தால் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம் என்று வேளாண்மை அதிகாரிகள் கூறினர்.
விவசாயிகளுக்கு நீரா பானம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்த வல்லுநர்கள்.  
விவசாயிகளுக்கு நீரா பானம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்த வல்லுநர்கள்.  

நீரா பானம் தயாரித்தால் ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம் என்று வேளாண்மை அதிகாரிகள் கூறினர்.
 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின்படி, தென்னையில் நீரா பானம் மதிப்பு கூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட மின்னக்கல் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வே.ராஜதுரை பேசியது:-
 "நீரா' பானம் என்பது பதனீருக்கும், கள்ளுக்கும் இடைபட்ட ஒரு பானம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி பருகுகின்றனர். இதை பதநீர் போல் இறக்க முடியாது.
 5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இருக்க வேண்டும். அதற்காக ஐஸ் பெட்டிகளைப் பொருத்தி, அதனுள் வைக்கப்படும் பானைகளில் சேகரமாகும் நீராவை இறக்கி, தயாராக உள்ள பிரீசர் பொருத்திய வேனில் ஏற்றி குளிர்பதன மையங்களுக்கு அனுப்பப்படும். அங்கு பதப்படுத்தப்பட்டு கடைகளுக்கு அனுப்பி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்வர். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு மரத்திற்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என்றார்.
 இதையடுத்து, சத்தியமங்கலம் தென்னை உழவர்கள் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசியது:-
 தேசிய அளவில் தென்னை சாகுபடி பரப்பில் முதலிடத்திலும், தென்னை உற்பத்தியில் 2-ஆம் இடத்திலும் தமிழகம் இருக்கிறது. இதோடு லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு தென்னை வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வருமானத்தை உயர்த்த தென்னம்பாளையிலிருந்து 'நீரா' பானத்தை இறக்கவும், அதனை பதப்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் வகையில், 'தமிழ்நாடு நீரா விதிகள்,2017' என்பதை வடிவமைத்து, தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.
 நீரா பானத்திலிருந்து, நீரா வெல்லம், நீரா பாகு, நீரா சர்க்கரை, நீரா சாக்லெட்டுகள், நீரா கூழ், நீரா கேக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்
 கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கவும், விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும் இதனால் வழி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்து தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களையும் உற்பத்தி செய்ய முடியும்.
 பிறருக்கு அனுமதி இல்லை. மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்திடம் பதிவு செய்த தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே நீரா பானத்தையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களையும் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.
 இதைத் தொடர்ந்து, தென்னை கன்றுகள் வழங்குதல், தென்னை நுண்ணுட்டச்சத்து பாக்கெட்டுகள் மானியத்தில் வழங்குதல், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிரை காப்பீடு, உழவன் செயலி பதிவேற்றம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
 வட்டார அட்மா தலைவர் எஸ்.பி.தாமோதரன், வேளாண்மை அலுவலர் மா.செüந்தர்ராஜன், துணை வேளாண்மை அலுவலர் பழனிவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆரோக்கியசாமி, பழனிசாமி, கருப்புசாமி, அந்தோணிசாமி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மா.இரமேஷ், கவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com