முழு நேர ஊதியத்தை வழங்க ஊராட்சி பணியாளர்கள் கோரிக்கை

அரசாணைப்படி முழுநேர ஊழியருக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாணைப்படி முழுநேர ஊழியருக்கான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
 தமிழக அரசு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணிக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்தது. அதன்படி 2017ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல், 1 மணி நேரத்துக்கு அடிப்படை ஊதியம் ரூ. 38.50, பஞ்சப்படி ரூ.15.52 சேர்த்து, ஒரு மணி நேரத்துக்கு ரூ. 54.02 கணக்கிட்டு தினமும் 4 மணி நேரத்துக்கு ரூ. 216.08 வழங்க வேண்டும்.
 மேலும் மாதத்துக்கு ரூ. 5,618 வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2017 அக்டோபர் முதல் நிலுவைத்தொகையை வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்கவும், சென்னை தொழில் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் முழுநேர ஊழியராக பாவித்து முழுநேர ஊழியருக்கான ஊதியம், தினமும் ரூ. 432.16 வீதம், மாதம் ரூ.13,238 வழங்கவும் நிலுவைத்தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com