மகனை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

ராசிபுரம் அருகே மகனை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

ராசிபுரம் அருகே மகனை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காக்காவேரி சங்கன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாசம் (64), விவசாயி. இவரது மகன் டேவிட் அருள் (31), லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி டேவிட் அருள் தனது தந்தையின் விவசாய நிலத்தில் இருந்த மரங்களை விலைபேசி விற்பனை செய்து விட்டார்.
இதை ஜெயப்பிரகாசம் தட்டிக்கேட்டுள்ளார். இதில், தந்தைக்கும், மகனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயப்பிரகாசம் கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த டேவிட் அருள் உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயப்பிரகாசத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயப்பிரகாசத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி கே.எச். இளவழகன் தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com