மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ஆறு வயதிற்குள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பல்நோக்கு மறுவாழ்வு மருத்துவ முகாம் கபிலர் மலையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆறு வயதிற்குள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பல்நோக்கு மறுவாழ்வு மருத்துவ முகாம் கபிலர் மலையில் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே. சுப்பிரமணி தலைமையில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து 6 வயதிற்குள்பட்ட குழந்தைகளையும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்தப் பகுதியில் மொத்தம் உள்ள 4,964 குழந்தைகளில் ஆரம்ப நிலை பாதிப்பில் உள்ள 24 குழந்தைகள் கண்டறியப்பட்டன.
அவ்வாறு கண்டறியப்பட்ட 6 வயதுக்குள்பட்ட 24 குழந்தைகளையும் ஆய்வு செய்ததில் பிறவிக் குறைபாடு, மூளை முடக்குவாத பாதிப்பு, பாதம் வளைந்த நிலையில் உள்ளவர் ,காது கேளாத வாய் பேசாதவர், பார்வையற்றவர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் புற உலகை தொடர்பு கொள்ள இயலாதவர் போன்ற மாற்றுத்திறன் பாதிப்படைந்த குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
குழந்தைகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மருத்துவ பயிற்சிக்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கு நாமக்கல் தலைமை மருத்துவமனை மருத்துவக் குழுவின் மூலம் பல்நோக்கு மருத்துவ முகாம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் மாற்றுத்திறன் குழந்தைகளிடையே மருத்துவ பரிசோதனை, மருத்துவ சிகிச்சை, தேசிய அடையாள அட்டை, பராமரிப்பு மானியம் உதவித்தொகை, இயன்முறை பயிற்சி, பேச்சுப்பயிற்சி நடைபயிற்சி, உதவி உபகரணம், சிறப்புக்கல்வி, அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பெற்றோருக்கு மன நல ஆலோசனை போன்ற அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. இந்த முகாமில் பல்வேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com