சி.பி.எஸ்.இ. தேர்வு: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ள பிளஸ் 2 தேர்வில் நாமக்கல், நேசனல் பப்ளிக் பள்ளி உயர்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ள பிளஸ் 2 தேர்வில் நாமக்கல், நேசனல் பப்ளிக் பள்ளி உயர் மதிப்பெண்களுடன் நான்காம் ஆண்டாக நூறு சதவீதத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப் பள்ளி மாணவி சாமின் தெரஷ் 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், நந்திதா 463 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பவிஷ்னா ஸ்ரீ 462 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். மேலும் 26 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்களுடன் ஒரு மாணவியும், இயற்பியலில் 95 மதிப்பெண்களுடன் 6 மாணவர்களும், வேதியியலில் 95 மதிப்பெண்களுடன் 2 மாணவர்களும், கணிதத்தில் 95 மதிப்பெண்களுடன் 3 மாணவர்களும், உயிரியலில் 96 மதிப்பெண்களுடன் ஒரு மாணவியும், கணினி தகவல் தொழில் நுட்பவியலில் 99 மதிப்பெண்களுடன் ஒரு மாணவியும், வணிகவியலில் 95 மதிப்பெண்களுடன் இரண்டு மாணவர்களும், கணக்குப் பதிவியியலில் 93 மதிப்பெண்களுடன் ஒரு மாணவனும், பொருளாதாரத்தில் 97 மதிப்பெண்களுடன் இரண்டு மாணவர்களும், நுண்கலை ஓவியப் பாடத்தில் 93 மதிப்பெண்களுடன் 2 மாணவர்களும் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான அகில இந்திய அளவில் நடைபெற்ற ஜே.இ.இ. தேர்வில் பள்ளி மாணவர்கள் அருண்பிரசாத், கிஷோர், திவேúஷ் ராஜ், ரித்திக், ஆசிகா, சிவபாலன், சுபாஷ், பவிஷ்னா ஸ்ரீ, சாமின் தெரஷ், ஹேமபிரியா ஆகியோர் பிரதானத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் கே.பி.சரவணன், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com