பால் வியாபாரி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் தங்கசாலை வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். விசைத்தறிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவரது  மகன் ராமன்(23). ராமன் அவரது தந்தை நடத்தி வந்த தறித் தொழிலை கவனித்து வந்தார். இவர் வெண்ணந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். 
அந்த பெண் வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி, செட்டிக்காட்டைச் சேர்ந்த பால் வியாபாரி சக்திவேலை(27), காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமன்,  கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி இரவு வெண்ணந்தூர், துளக்கன்காட்டில் தனியார் விவசாய இடத்தில் சக்திவேலின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். 
இதுதொடர்பாக வெண்ணந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.  இந்த கொலை வழக்கு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விசாரணைக்காக நாமக்கல் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.  குற்றம் சாட்டப்பட்ட ராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பளித்தார்.  அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட 17 வயது சிறுவனை நீதிபதி விடுதலை செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com