மக்கள் மீது மத்திய அரசு தொடர்ந்து சுமைகளை ஏற்றி வருகிறது: எம்.யுவராஜா

மத்திய அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றி வருகிறது. பதவிக் காலம் முடியும் முன்பு பெட்ரோல், டீசல் விலை

மத்திய அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றி வருகிறது. பதவிக் காலம் முடியும் முன்பு பெட்ரோல், டீசல் விலை ரூ.100-க்கு வர வாய்ப்புள்ளது என தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்தார். 
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் தமாகா இளைஞரணி சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தமாக இளைஞரணி சார்பில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தை மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா தொடங்கிவைத்தார். 
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  மக்கள் மீது மத்திய அரசு தொடர்ந்து சுமைகளை ஏற்றி வருகிறது.  அரசின் பதவிக் காலம் முடியும் முன்னரே பெட்ரோல், டீசல் விலை ரூ.100 என்ற அபாயகரமான நிலை உருவாக வாய்ப்புள்ளது.  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும், நாள் தோறும் விலை நிர்ணயம் என்ற கொள்கையை கைவிடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும்.  பெட்ரோல் விலையை கடந்த வாரத்தில் ரூ.2.68 குறைத்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.  ஆனால் கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.32 அளவு உயர்ந்துள்ளது.  டீசல் விலையும் ரூ.2.09 அளவு உயர்ந்துள்ளது.  
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசுடன் பேச வேண்டும்.  தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி.  உடனடியாக இந்த ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த  வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமாகா நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் என்.இளங்கோ,  இளைஞரணித் தலைவர் அருள் ராஜேஷ்,  நாமக்கல் நகரத் தலைவர் சக்தி வெங்கடேஷ், மாவட்டச் செயலாளர் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேறனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com