பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க "காவலன்' செயலி அறிமுகம்

ராசிபுரம் அருகே ஆயில்பட்டி லயோலா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் காவல் துறையின் "காவலன்' செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் அருகே ஆயில்பட்டி லயோலா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் காவல் துறையின் "காவலன்' செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அவசர கால பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, கடத்தல், கொள்ளை போன்ற அவசர காலங்களில் பொதுமக்கள், பெண்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல்துறை சார்பில் "காவலன்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆயில்பட்டி லயோலா கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இச்செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் காவல்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடந்தது. முகாமில் ராசிபுரம் டிஎஸ்பி., ஆர். விஜயராகவன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி. சேவியர் வேதம் வரவேற்றார். காவல்துறை ஆய்வாளர்கள் பி. மணிகண்டன் (நாமகிரிப்பேட்டை) பி.ராமகிருஷ்ணன் (பேளுக்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து இந்தச் செயலியை கைபேசிகளில் எப்படி பதிவிறக்கம் செய்வது?,  சுய விவரங்கள் பதிவு செய்தல், ஆபத்து காலங்களில் எப்படி இதனை பயன்படுத்துவது? என்பன போன்ற விவரங்கள் மாணவ மாணவியர்களுக்கு கம்ப்யூட்டர் திரை மூலமாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 
இதையடுத்து இச் செயலியை அறிமுகப்படுத்தி மாணவர்களிடையே ராசிபுரம் டிஎஸ்பி., ஆர். விஜயராகவன் பேசியதாவது:
இச் செயலி பொதுமக்கள் பயன்பெறவும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் இது போன்ற செயலி தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஆபத்து காலங்களில் தங்களை காத்துக்கொள்ள இயலும் என்பதால், இது குறித்து அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது, ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், அவர் மாணவர்களிடையே வலியுறுத்திப் பேசினார். இதில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சின்னப்பன், தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com