ஊதியம் பெறுவதில் புதிய நடைமுறை: நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம் ஊதியம் மற்றும் பிற பலன்களை பெறும் முறை, நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார். 

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம் ஊதியம் மற்றும் பிற பலன்களை பெறும் முறை, நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தெரிவித்தார். 
மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் பணம் பெறும் நீதித்துறை சார்ந்த அனைத்து நீதிபதிகளுக்கும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியம் மற்றும் பிற பலன்களை பெறுவது குறித்த பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகக் கூட்டரங்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ஹெச். இளவழகன் தலைமையில் சனிக்கிழமை
நடைபெற்றது.
பயிற்சியைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் பேசியது: இந்தியாவிலேயே முதல் முறையாக முன்னோடி திட்டம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் ரூ. 288.90 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது மின்னணு பணிப் பதிவேடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. துறைவாரியாக அனைத்து பணியாளர்களின் சரிபார்ப்பு பணிகள் அந்தந்த துறைகளில் நடைபெற்று வருகின்றன. இப்பணி முடிவடைந்தவுடன் நவம்பர் முதல் வாரத்தில் இத் திட்டம் செயல்முறைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன
என்றார். 
தமிழகத்தில் முதன் முதலாக நாமக்கல் மாவட்டத்தில்தான் நீதித்துறை அலுவலர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் நீதித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் ஊதியம் மற்றும் அனைத்து பலன்களையும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் எவ்வாறு பெற்றுத் தருவது என்பது குறித்தும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் சிறப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் கூடுதல் சார் கருவூல அலுவலர் பா. மாதேஸ்வரன், மாவட்டக் கருவூல கண்காணிப்பாளர் க. மோகனமாதவன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com