காவிரி ஆற்றில் தேங்கிய நெகிழிப் பொருள்களை அகற்றக் கோரிக்கை

காவிரி ஆற்றில் தேங்கிய நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரி ஆற்றில் தேங்கிய நெகிழிப் பொருள்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கடந்த மாதம் காவிரியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் கரை ஓரமாக உள்ள சீமைக் கருவேல மரங்களில் நெகிழிப் பொருள்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் கரையோரம் பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய குடிநீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலர் எஸ்.கந்தசாமி தெரிவித்தது: கடும் வெள்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. 
தற்போது உள்ள சூழ்நிலையில் சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பபட்டுள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் மலை போல் தேங்கி இருக்கும் நெகிழிப் பொருள்களை அகற்றி, காவிரி குடிநீரை பாதுகாப்பான முறையில் மக்களுக்கு வழங்கவும், விவசாயிகள் காவிரி நீரைப் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com