நாமக்கல் நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கமலநாதன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
முகாமில் புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, புதை சாக்கடை இணைப்பு, தொழில் வரி விதித்தல், கட்டட அனுமதி, காலிமனை நிலங்கள் முறைப்படுத்தல் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. 
மேலும் சொத்துவரி, குடிநீர் இணைப்பு, புதை சாக்கடை உள்ளிட்டவைகளில் பெயர் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்த மனுக்களும் பெறப்பட்டன.
முகாமில் நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட 39 வார்டுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இதில், பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை நாமக்கல் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com