திமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
 நாமக்கல் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர கழகப் பொறுப்பாளர் சி. மணிமாறன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து செ. காந்திசெல்வன் பேசியதாவது(படம்):
 தமிழக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. குட்கா ஊழலில் அமைச்சர், டிஜிபி வீடுகளில் சிபிஐ போலீஸார் சோதனை நடத்தினர்.
 இதுபோல் முதல்வர் உள்பட பல்வேறு அமைச்சர்கள் குறித்த ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், டிஜிபி பதவி விலக வேண்டும்.
 இதுபோல் மத்திய அரசு ரஃபேல் போர் விமான ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்து வருகின்றன.
 மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான அரசுகளாக இல்லாமல், ஊழல் மிகுந்த ஆட்சியாக உள்ளது. மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் ரா. உடையார், துணைச் செயலர்கள் பி. ராமலிங்கம், கே.பொன்னுசாமி, எஸ். விமலா சிவக்குமார், பொருளாளர் கே. செல்வம், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ப. ராணி, சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் ரா. நக்கீரன், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் பார். இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பி. ராமசுவாமி கே. பழனியம்மாள், சரசுவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com