நாமகிரிப்பேட்டையில் நாளை இலவச திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமகிரிப்பேட்டையில் வரும் வியாழக்கிழமை இலவச திறன் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாமகிரிப்பேட்டையில் வரும் வியாழக்கிழமை இலவச திறன் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழக அரசால் திறன் பயிற்சி, திறன் விழிப்புணர்வு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி கிராமப்புற வேலைநாடுநர்களைச் சென்றடையும் வகையில் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 அதன்படி நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்தும் வகையில், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் பயிற்சி விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படவுள்ளது.
 முகாமில் 5-ஆம் வகுப்புப் படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் அழகுக்கலை, தையல் பயிற்சி, பெட் சைட் அசிஸ்டென்ட், சிசிடிவி கேமரா பொருத்தும் பயிற்சி, கணினி இயக்குபவர் பயிற்சி, எலக்ட்ரீசியன், வெல்டர், லேத் ஆப்ரேட்டர், ஆட்டோ மேட்டிவ் சர்வீஸ் டெக்னீசியன் பயிற்சி, ஓட்டுநர் பயிற்சி போன்ற திறன் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
 இந் நிறுவனங்களால் அளிக்கப்படும் பயிற்சிகளில் விருப்பப்படும் திறன் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், தொடர்புடைய தனியார் துறைகளில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படுகின்றன. மேலும், இப் பயிற்சியின்போது போக்குவரத்து செலவினம், பயிற்சி புத்தகம், எழுது பொருள், புத்தகப் பை போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, இளைஞர்கள், இளம்பெண்கள் முகாமில் கலந்து கொண்டு திறன்பயிற்சிக்கு பதிவு செய்து, இலவசப் பயிற்சி பெற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com