பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

குமாரபாளையம் பகுதியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் பகுதியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில், 20 பேர் பள்ளி செல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம், பள்ளிபாளையம் வட்டார வள மையம் சார்பில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கடந்த 10-ஆம் தேதி முதல் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 வயது முதல் 14 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள், பிறந்த குழந்தை முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் குறித்தும் கணக்கெடுக்கப்படுகிறது.
இந்தப் பணியில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் 25-ஆம் தேதி வரையில் இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதுவரையில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் 20 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், கண்டறியப்படும் குழந்தைகளையும் முறையாக பள்ளிகளில் சேர்த்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பொதுமக்கள் இதுபோன்ற மாணவர்கள் எவரேனும் இருந்தால் அருகிலுள்ள பள்ளியிலோ, வட்டார வள மையத்திலோ தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com