சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா நாளை தொடக்கம்

சங்ககிரி அருள்மிகு சென்ன கேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை (மே 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்ககிரி அருள்மிகு சென்ன கேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை (மே 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி சுவாமி மலையிலிருந்து நகருக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அன்று இரவில் சுவாமி அன்னபட்சி வாகனத்திலும், 2-ஆம் நாள் சிங்கம் வாகனத்திலும், 3-ஆம் நாள் அனுமந் வாகனத்திலும், 4-ஆம் நாள் கருடன் வாகனத்திலும், 5-ஆம் நாள் சேஷ வாகனத்திலும், 6-ஆம் நாள் யானை வாகனத்திலும், 7-ஆம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று புஷ்ப வாகனத்திலும், 8-ஆம் நாள் குதிரை வாகனத்திலும் சுவாமி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருகிறார். 9-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (மே 9) திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து பல்வேறு கட்டளை வழிபாட்டுக்குப் பின்னர் சுவாமி மே 20-ஆம் தேதி சனிக்கிழமை மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு மலையடிவாரத்தில் உள்ள சுவாமி மண்டபத்தில் தினசரி காலை, மாலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சுவாமி மலையிலிருந்து இறங்கி தேரில் பவனி வரும் நிகழ்ச்சி முடிந்த பிறகு சங்ககிரி அருகே உள்ள ஈரோடு -பவானி பிரிவு சாலை பகுதியில் உள்ள தேவராஜா மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு சங்ககிரி மேற்குப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதையொட்டி தேர்களின் மேற்கூரை அகற்றப்பட்டு அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com