சேலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் -1 தேர்வுக்கு 11,702 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதில் சனிக்கிழமை 24 மையங்களில் 2,629 ஆண்கள், 8,696 பெண்கள் என மொத்தம் 11,325 பேர் தேர்வு எழுதினர்.
சூரமங்கலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தேர்வைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல், போன்ற பணிகளை சிறப்பான முறையில் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையங்களுக்கு துணை ஆட்சியர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள், தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வுப் பணியில் தலைமை ஆசிரியர்கள் உள்பட 800 ஆசிரியர்களும், 72 நிலைக்கண்காணிப்பு அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் தேர்வைக் கண்காணிக்க இணை இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெüரி, சேலம் மேற்கு வட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com