முதல்வர் வருகை முன்னேற்பாடு பணிகள்: எடப்பாடியில் ஆட்சியர் ஆய்வு

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) எடப்பாடி வருகை தரவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) எடப்பாடி வருகை தரவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் ஆய்வு செய்தார்.
எடப்பாடி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வறட்சிக் கால முன்னேற்பாடுகள், சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் அரசு அலுவலர்களிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை
நடத்தவுள்ளார். மேலும், பொதுமக்களிடம் மனுக்கள் பெற உள்ள நிலையில் எடப்பாடி நகரில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமையில் சனிக்கிழமை பொதுப்பணித் துறை விடுதி அரங்கில் நடைபெற்றது.
இதில் வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வட்டாட்சியர் சண்முகவள்ளி மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவிலான
கூடைப்பந்து போட்டி தொடக்கம்
சேலம், ஏப்.29: சேலம் மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
சேலம் எஸ்.பி.எல்.எஸ். கோப்பைக்கான மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் நான்கு நாள் நடைபெறும் போட்டியில் 9 ஆண்கள் அணிகளும், 4 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இறுதிப் போட்டிகள் மே 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகள் காந்தி மைதானத்தில் மின்னொளியில் நடைபெறுகிறது.
கூடைப்பந்து தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் எஸ்.பி.எல்.எஸ். நிர்வாகி ராமகிருஷ்ணன், மாவட்ட கூடைப்பந்து சங்க செயலர் பிஜு ஜோசப், செவ்வாய்ப்பேட்டை ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பாலாஜி, பாஸ்கர், கோவிந்தராஜன், சங்கரன், ரகு ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com