குறைவாக விதிக்கப்பட்ட சொத்துவரி, தொழில்வரியை மதிப்பீடு செய்ய 60 சிறப்புக் குழுக்கள் அமைப்பு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் விடுபட்டுள்ள, குறைவாக விதிக்கப்பட்ட சொத்து வரி மற்றும் தொழில் வரி, காலிமனை வரி,

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் விடுபட்டுள்ள, குறைவாக விதிக்கப்பட்ட சொத்து வரி மற்றும் தொழில் வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணங்களை மதிப்பீடு செய்வதற்கு 60 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ரெ. சதீஷ் தெரிவித்தார்.
 சேலம் மாநகராட்சிக்குள்பட்ட 60 கோட்டங்களில் அமைந்துள்ள கட்டடங்களில் குறைவாகவும், வரி விதிக்காமல் விடுபட்டுள்ள கட்டடங்களுக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரி, காலிமனை வரி குடிநீர் இணைப்பு கட்டணங்களை மதிப்பீடு செய்வதற்கு கோட்டத்துக்கு 3 பேர் வீதம் 60 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 இக்குழுவில் 180 பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவினர் மேற்கொள்ளும் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஏதுவாக, மண்டலத்துக்கு ஒரு பொறுப்பு அலுவலர் வீதம் 4 பொறுப்பு அலுவலர்களும் மற்றும் 4 மேற்பார்வை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இக்குழுவினர் சம்பந்தப்பட்ட கோட்டத்தில் தெரு வாரியாகச் சொத்து வரி விதிக்கத்தக்க கட்டடங்களை அளவீடு செய்தும், விடுபட்டுள்ள தொழில் வரி இனங்களைக் கண்டறிந்து மதிப்பீடு செய்தும், காலி மனை வரி விதிப்பு, அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் இருப்பின் அது தொடர்பான விவரங்கள் மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாத இனங்களைக் கண்டறிந்து, தினந்தோறும் ஆணையர் அலுவலகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 இப்பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறும், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருப்பின் உடனடியாக அத்தொகையை செலுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com