மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 40.86 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 7,249 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 12.53 டி.எம்.சி.யாக இருந்தது. காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்தும் சற்று அதிகரித்துள்ளது.