வாழப்பாடி பகுதியில் மழை வேண்டி நூதன வழிபாடு

வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களில் மழை வேண்டி நூதன வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது.

வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களில் மழை வேண்டி நூதன வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது.
 வாழப்பாடி பகுதியில் கடந்த இரு ஆண்டாக வறட்சி நீடித்து வருவதால், பாசனத்துக்கு மட்டுமின்றி குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால், கிராமங்கள் தோறும் மழை வேண்டி, முன்னோர்கள் பின்பற்றிய நூதன வழிபாடுகளை நடத்துவது அதிகரித்து வருகிறது.
 வாழப்பாடியை அடுத்த தும்பல் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்பு மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றியும், அந்தக் கிராமத்திலுள்ள வயதான விதவைப் பெண்களுக்கு பாத பூஜை செய்தும், வழிபாடு நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரியம்மன்புதுôர் கிராமத்தில் குதிரையை கடவுளாகக் கருதி அலங்கரித்து அழைத்துச் சென்று வறண்ட ஏரியில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
 வாழப்பாடியை அடுத்த வைத்தியகவுண்டன்புதுôர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை வறண்டு காணப்படும் வசிஷ்டநதிக்கு திரண்டு சென்ற பெண்கள், பால்குடத்துடன் அம்மனை கிராமத்திற்கு அழைத்து வந்தும், திருவிளக்கு பூஜை நடத்தியும் வழிபட்டனர் (படம்).
 இதையடுத்து வாழப்பாடி பகுதியில் ஓரிரு தினங்களாக மழை பெய்து வருவதால் நூதன வழிபாடு நடத்தி வரும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com