அத்தனூர்பட்டியில் முப்பூஜை திருவிழா

வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து பச்சியப்பன், பச்சியாயி கோயிலில் முப்பூஜை திருவிழாவை நடத்தினர்.

வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து பச்சியப்பன், பச்சியாயி கோயிலில் முப்பூஜை திருவிழாவை நடத்தினர்.
 அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தில் கொட்டவாடி சாலையில் பழைமையான பச்சியப்பன், பச்சியாயி கோயில் உள்ளது. அத்தனூர்பட்டி, துக்கியாம்பாளையம், மாரியம்மன் புதூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் கடந்த இரு தினங்களாக முப்பூஜை வழிபாடு நடத்தினர்.
 இதில் பாரம்பரிய முறைப்படி பூஜை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருள்கள், பாத்திரங்களை புதிய மூங்கில் கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி பெண்கள் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். 100-க்கும் மேற்பட்ட ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டு முப்பூஜை வாழிபாடு நடத்தியதோடு, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காதணி விழாவும் கோயில் வளாகத்திலேயே நடத்தி உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்துஅளித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com