மேட்டூர் ராஜவாய்க்காலில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணை ராஜவாய்க்காலில் வியாழக்கிழமை மாலை நீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை ராஜவாய்க்காலில் வியாழக்கிழமை மாலை நீர் திறக்கப்பட்டது.
 மேட்டூர் அணையிலிருந்து மொத்தம் நொடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் தலா 300 கனஅடி வீதம் மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை வாய்க்காலில் திறந்துவிடப்படுகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில நாள்களில் வாய்க்காலின் கடைமடை பகுதிகளை சென்றடையும் என வாய்க்கால் பாசனப் பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
 இதுகுறித்து விவசாயிகள் கூறியது: ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மேட்டூர் அணையிலிருந்து வாய்க்கால் பாசனத்துக்கு தொடர்ந்து நீர் திறப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
 மேலும் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் பருவ மழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்துப் போன நிலையில், உரிய காலத்தில்
 ராஜவாய்க்காலில் நீர் திறப்பு செய்யப்படாத நிலையில் நிகழாண்டு, சம்பா சாகுபடி தருணம் முழுவதும் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com