பெரியார் பல்கலை.யில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் புதன்கிழமை  அனுசரிக்கப்பட்டது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் புதன்கிழமை  அனுசரிக்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கரின்  உருவப் படத்துக்கு, பதிவாளர் மா.மணிவண்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தேர்வாணையர் எஸ்.லீலா,  டீன் வி.கிருஷ்ணகுமார்,  பேராசிரியர்கள், நிர்வாக  அலுவலர்கள், மாணவ-மாணவியர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 பின்னர்  நடைபெற்ற விழாவில் பதிவாளர் மா.மணிவண்ணன் பேசியது:
 அண்ணல் அம்பேத்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். 1935-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு சென்ற அம்பேத்கர் எழுதிய 20 பக்கக் கட்டுரையை, அந்தப்  பல்கலைக்கழகம் தங்களுடைய பாடத்திட்டத்தில் இன்னும் வைத்துள்ளது. இதில் இருந்தே, அம்பேத்கரின் சிறப்பை அரிய முடியும். காரல் மார்க்ஸ் மறுமலர்ச்சியையும், மாற்றத்தையும் வலியுறுத்தினார்.  அவரைப் போன்று, புத்தகப்புழுவாக, எந்நேரமும் நூலகத்தில் இருந்து புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பவராக இருந்த அம்பேத்கரும் சமூக மாற்றத்தையே பிரதானமாக வைத்திருந்தார்.தொடக்க நாள்களில் 14 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை, 8 மணி நேரமாக மாற்றிய சாதனை  அம்பேத்கரையே சேரும். இதைப் போல, 1935-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டதற்கும் அவரே  பிரதான காரணமாக திகழ்ந்தார். 1947-இல் சட்டம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர்,  மகளிருக்கான உரிமை மசோதாவை கொண்டு வந்ததார் என்றார். 
நிகழ்ச்சியில்,பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com