ஊரகப் பகுதி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களில் முன்னுரிமை: பெரியார் பல்கலை. பதிவாளர் மா.மணிவண்ணன்

கல்லூரிகளில் நடைபெறும் வேலைவாய்ப்பு வளாகத் தேர்வுகளில் ஊரகப் பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பெரியார் பல்கலை. பதிவாளர் மா.மணிவண்ணன் தெரிவித்தார்.

கல்லூரிகளில் நடைபெறும் வேலைவாய்ப்பு வளாகத் தேர்வுகளில் ஊரகப் பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பெரியார் பல்கலை. பதிவாளர் மா.மணிவண்ணன் தெரிவித்தார்.
 பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப் பணி வழிகாட்டி, பணியமர்த்த மையம் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் ஆட்சிப் பேரவைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அவர் பேசியது:-
 அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் உரிய பயிற்சி அளிக்க வேண்டும். சென்ற ஆண்டில் 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்த வளாகத் தேர்வுகளை பெரியார் பல்கலைக்கழகத்திலும் இணைவு பெற்ற கல்லூரிகளிலும் நடத்தின. இவற்றில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 1872 பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். இது 18 சதவீதமாகும். இதேபோ, மற்ற கல்லூரிகளில் நடைபெற்ற வளாகத் தேர்வுகளில் 7 சதவீதம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். ஓட்டுமொத்தமாக 25 சதவீதம் பேர் வளாகத் தேர்வுகளில் வேலை பெற்றுள்ளனர்.
 இதனை வரும் ஆண்டில் இரண்டு மடங்காக, அதாவது 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதற்கு தொடர்ச்சியான பயிற்சி அவசியம். அதற்காக பல்வேறு நிறுவனங்களை அழைத்து பயன்படுத்த வேண்டும்.
 கல்லூரிகளில் பெரும்பாலானவை ஊரகப் பகுதிகளில் உள்ள நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் பயிற்சியளிக்கப்படும் என்றார்.
 நிகழ்ச்சியில் வீ டெக்னாலஜிஸ் சேலம் நிறுவனத்தின் மனித வளத் துறையின் உதவித் தலைவர் செüஜன்யா பிரகாஷ் பேசும்போது, "மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் புலமை மட்டுமல்லாமல், அனைத்துவித திறமைகளும் இருந்தால் திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் நிறைய உள்ளன"என்றார்.
 முகாமுக்கு மைய ஒருங்கிணைப்பாளர் பி. திருமூர்த்தி தலைமை வகித்தார். பத்மவாணி கல்லூரி முதல்வர் சுப்புராஜ், வீ டெக்னாலஜிஸ் மனிதவளப்பிரிவு மேலாளர் கோகுல்ராஜ், ஹையர் நிறுவனத்தின் மேலாளர் லஷ்மிகாந்த், பல்கலை. பணியமர்த்த மைய அலுவலர் பாலமுருகன், கல்லூரிகளின் வேலைவாய்ப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com