அனுமதியின்றி மணல் கடத்தியதாக டிப்பர் லாரி பறிமுதல்

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை செய்த போது,

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை செய்த போது, உரிய அனுமதியில்லாமல் மணல் எடுத்துச் சென்றதாக டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
 சங்ககிரி வட்டாட்சியர் கே.அருள்குமார், கிராம நிர்வாக அலுவலர் பச்சமுத்து மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் வைகுந்தம் அருகே உள்ள காளிப்பட்டி பிரிவு சாலை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
 அப்போது, எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியிலிருந்து ஆட்டையாம்பட்டிக்கு உரிய அனுமதியில்லாமல் மணல் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினர் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மேல் விசாரணைக்காக வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகனிடம் அனுப்பி வைத்தனர். அவர், அனுமதியில்லாம் மணல் எடுத்துச் சென்ற தங்கவேல் மகன் ராஜேந்திரனுக்கு ரூ.26,400 அபராதம் விதித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com