கோட்டகவுண்டம்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக, பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக, பள்ளி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஓமலூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் கோட்டகவுண்டம்பட்டி கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
 இந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் முருகன், 8-ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக, அந்த மாணவியின் உறவினர் பலர் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்து, ஆசிரியர் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஆசிரியர் முருகன் பலத்த காயமடைந்தார்.
 தகவலின் பேரில் வந்த சூரமங்கலம் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியர் முருகன் மாணவிக்கு படிப்பது குறித்த அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கியதை தவறாகப் புரிந்து கொண்டு, அவர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
 இதைத் தொடர்ந்து, சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பள்ளி மாணவி உள்பட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களையும், பள்ளி ஆசிரியர் முருகனையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
 இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரியிடம் கேட்டபோது, மாவட்டக் கல்வி அலுவலரைக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஆசிரியர் முருகன் மீது எவ்வித தவறும் இல்லை என்று மாணவர்களும், ஆசிரியர்களும் எழுதிக் கொடுத்துள்ளனர்.
 சம்பவம் பற்றி முழுமையாகத் தெரியாமல், மாணவியின் உறவினர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அத்துமீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என்றார்அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com