பசுமை வீடுகள் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியம்

சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் வீடுகட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் வீடுகட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், ரூ.2.10 லட்சத்தில் 300 சதுர மீட்டர் குறையாமல் புதிதாக வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு, "முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பசுமை வீடுகள் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு 2017-18-ஆம் ஆண்டுக்கான பசுமை வீடுகள் கட்ட இடவசதியுடன் கூடிய தகுதியான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுவாழ்வுத் திட்டத்தில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஏழை மற்றும் மிகவும் ஏழைகளைக் கண்டறிந்து, இனம் வாரியாக காத்திருப்போர் மற்றும் உத்தேச பட்டியல் ஊராட்சி வாரியாக தயார் செய்து, அதை கிராம சபையில் வைத்து அங்கீகாரம் பெற்று, ஊராட்சிகள் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 பயனாளிகள் சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விபரங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.
 தூய்மை பாரத இயக்கம் என்பது சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரம் (ம) கழிவறை பயன்படுத்தும் வசதிகளை பெறவேண்டும் என்ற நோக்கில் 2015-16-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. தனிநபர் இல்லக் கழிவறை ஒன்றினை கட்டுவதற்கு அரசின் ஊக்கத்தொகையாக ரூ.12,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சேலம் மாவட்டத்தை முழுவதுமாக திறந்தவெளி மலம் கழித்தலற்ற மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு திட்டத்தில் தனிநபர் இல்லக் கழிவறை கட்ட கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு எண் விபரத்தை கொடுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலங்களை நேரில் அணுகலாம்.
 மேலும், 1299 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது 7094436102 என்ற செல்லிடப்பேசி எண்களை தொடர்பு கொண்டோ பயன்பெறலாம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com